என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை காங்கிரஸ்"
புதுவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ரபேல் விமானங்களை மாநில மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இளம் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டார். அதனை ஏற்று பிரமாண்டமான ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டி உள்ளீர்கள்.
இதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ராகுல் அழைப்பு விடுத்தார். அதனையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிளீர்கள். அதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரபேல் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்
ரபேல் விமானத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டுள்ளது. போர்பர்சில் ரூ. 68 கோடி ஊழல் என குற்றம் சாட்டி மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இன்று ரபேல் விமான வாங்கியதில் ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் இருந்தது. தற்போது 80 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் விலை ரூ. 72 ஆக சரிந்துள்ளது.
பண மதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதால் தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பாராளுமன்றம் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும். புதுவை வேட்பாளரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காலாப்பட்டு ஜோசப் (வயது 46). காலாப்பட்டு முருகன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.
அமைச்சர் ஷாஜகானின் தீவிர ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
இன்று பகல் 12.30 மணியளவில் ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். பொம்மையார் பாளையத்தை தாண்டி ஆரோ பீச் அருகே வந்த போது மறைந்து இருந்த 2 பேர் திடீரென ஜோசப்பை வழிமறித்தனர்.
அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு முயன்றார். அதற்குள் சுற்றி வளைத்த அவர்கள் ஜோசப்பை சரமாரியாக வெட்டினார்கள். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். ஜோசப் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதியாகும். கோட்டக்குப்பம் போலீசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து சென்று ஜோசப்பை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஜோசப் புதுவை காங்கிரசில் மிக முக்கிய பிரமுகராவார். அவர் கொலையால் புதுவையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலாப்பட்டு பகுதியில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை வெட்டியவர்கள் யார்? என்று தெரியவில்லை. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை.
அவரை வெட்டியது 2 பேர் என்று தெரிந்தாலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஜோசப் புதுவைக்கு வந்ததை கண்காணித்து தகவல் சொன்னதன் அடிப்படையில் காத்திருந்து கொலை செய்துள்ளனர்.
எனவே மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஜோசப் எப்போதுமே தனியாகத்தான் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதை எதிர்பார்த்து காத்திருந்து கொலை செய்து இருக்கிறார்கள்..
கொலையுண்ட ஜோசப்புக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஜோசப் தனியார் தொழிற்சாலைகளில் காண்டிராக்ட் எடுத்து பணிகள் செய்து வந்தார். மேலும் பாலமுருகன் கோவில் அறங்காவலர் குழுவில் நிர்வாகியாகவும் இருந்தார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் முழக்க மிட்டு வருகிறார்கள்.
இதன்படி ஒவ்வொரு மாநிலமாக பாரதீய ஜனதா கைப்பற்றி வருகிறது. கடைசியாக 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தையும் கைப்பற்ற பாரதீய ஜனதா முயற்சித்தது. ஆனால், சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவற்றையும் எப்படியாவது அகற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா குறியாக இருக்கிறது.
கர்நாடகாவில் ஆட்சி அமைந்தால் அதன் மூலம் தென்மாநிலங்களின் நுழைவு வாயிலாக அது அமையும் என்று பாரதீய ஜனதா எதிர்பார்த்தது.ஆனால், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குட்டி மாநிலமான புதுவையில் பாரதீய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தி தென் மாநிலத்தில் நுழைவு வாயிலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
புதுவையில் ஆட்சியில் உள்ள காங்கிரசுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே பாரதீய ஜனதா மேற்கொண்டது.
புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 15 எம்.எல். ஏக்களும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சுயேச்சை ஒருவர் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதன் மூலம் 18 எம்.எல். ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரசிடம் 8 எம்.எல்.ஏ.க்களும், அ.தி. மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.
காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதாவுக்கு இழுத்து இதன் மூலம் ஆட்சி அமைக்கலாம் என பாரதீய ஜனதா திட்டமிட்டது. இதற்கு உதவும் வகையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.
இதன் மூலம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆனது. இன்னும் 2 பேரை காங்கிரஸ் தரப்பில் இருந்து இழுத்து விட்டால் கூட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விடலாம்.
எனவே, அதற்கான முயற்சியை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கையில் எடுத்தது. அப்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைக்கும்படி அமித்ஷா வற்புறுத்தினார்.
ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இதற்கு தயக்கம் காட்டியதால் அப்போது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது.
3 மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடி புதுவையில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ரங்கசாமி பிரதமருடன் தனியாக பேசினார். அப்போதும் ஆட்சி கவிழ்ப்பு பற்றி அவர்கள் ரகசியமாக பேசியதாக தெரிகிறது.
இதன் பிறகு ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி அழைத்தார். ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந் தித்து பேசினார்.
அப்போது இதுபற்றி விரிவாக திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் வந்ததால் புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை நிறுத்தி வைத்தனர்.
இப்போது கர்நாடக தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் இதை கையில் எடுக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் உரிய பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. கட்சி அலுவலகத்துக்கு கூட சென்றதில்லை.
இதுபோன்ற நபர்களை எளிதாக இழுத்து விடலாம் என பாரதீய ஜனதா கருதுகிறது. அவ்வாறு வரும் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதாவில் சேர்த்து ரங்கசாமி துணையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக வருகிற ஜூலை மாதம் அமித்ஷா புதுவை வர இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கைகள் தீவிரமாகலாம்.
ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரசை பாரதீய ஜனதாவுடன் இணைத்து விட வேண்டும் என்பது மோடியின் திட்டமாக உள்ளது. அதற்கு மட்டும் ரங்கசாமி சம்மதித்து விட்டால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை எளிதாக செய்து விடலாம் என்று பாரதீய ஜனதா கருதுகிறது. #AmitShah #congress #rangasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்